{"product_id":"2940046520538","title":"The story of Arichandran in Tamil","description":"\u003cp\u003eபதிப்புரை\u003c\/p\u003e\u003cp\u003eநம் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையை மாற்றியது அரிச்சந்திரனின் கதை. இக்கதையைக் கேட்ட பிறகுதான் அவர் எந்த சூழ்நிலையிலும் சத்தியம் தவறாமல் வாழும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.\u003c\/p\u003e\u003cp\u003eசுமார் 35 வருடங்களுக்கு முன்னால் கோயில் திருவிழாக்களின்போது அரிச்சந்திரன் நாடகம் என்பது வழக்கமான ஒன்று. மக்கள் விடியவிடிய இந்தமாதிரியான நாடகங்களை பார்த்து இரசிப்பது வழக்கம். இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே அதிகம் காண்கின்றனர். அரிச்சந்திரன் கதையை கேட்பதற்கான அல்லது படிப்பதற்கான வாய்ப்புக் குறைந்துவிட்டது.\u003c\/p\u003e\u003cp\u003eசுயநலத்திற்காக பொய்யுரைப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.மகனுக்காக, மனைவிக்காக, வேலைவாய்ப்புக்காக, தொழில் இலாபத்திற்காக என்று பொய்யுரைப்பது பலருக்கும் ஒரு காரணமாகிவிட்டது.\u003c\/p\u003e\u003cp\u003eஅரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை தருகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பலர் கொடுத்தவாக்குறுதிகளை மறந்து விடுகிறார்கள். பலர் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கான காரணத்தைச் சொல்லுகிறார்கள்.\u003c\/p\u003e\u003cp\u003eதொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட நேரத்தைவிட அதிகநேரம் வேலைவாங்கப்படுகிறார்கள்.\u003c\/p\u003e\u003cp\u003eஏமாற்றப்பட்டவர்களோ மற்றவர்கள் மீது நம்பிக்கையிழக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு வேலை முடிக்கப்படுவதற்கும் காலவிரயமாகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றமும், மனித இனத்தின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது.\u003c\/p\u003e\u003cp\u003eநாம் இவ்வுலகில் அவதரிக்கும்போது எதுவும் கொண்டுவரவில்லை. இவ்வுலகைவிட்டுச் செல்லும்போது எதுவும் எடுத்து செல்லப்போவதில்லை. வாழும்போது எவ்வாறு வாழ்ந்தோம் என்பதே முக்கியமாகும். அதனால் வாழ்க்கையில் வாய்மையை கடைப்பிடிப்பதே சரியானதாகும்.\u003c\/p\u003e\u003cp\u003eஇக்கதையில் அரிச்சந்திரன் ஒருமுறை பொய்யுரைத்திருந்தால் கூட அனைத்து சுகங்களையும் அனுபவித்திருக்க முடியும்.ஆனால் அரிச்சந்திரன் மனைவியை இழந்தான், மகனை இழந்தான், இடுகாட்டில் வேலைசெய்யும் சூழ்நிலையும் உருவாகியது.இவ்வளவு சிரமங்களை அனுபவித்தாலும் அவன் வாய்மையைக் கடைப்பிடித்தான்.\u003c\/p\u003e\u003cp\u003eஅதனால்தான் அவனை தேவர்கள் போற்றினர். இன்றும் அவன் கதையை நாம் விரும்பி கேட்டும் படித்தும் வருகிறோம்.\u003c\/p\u003e\u003cp\u003eஇக்கதையை மின்புத்தகமாக Mukil E Publushing and Solutions Private Limited மூலம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.\u003c\/p\u003e","brand":"Mukil E Publishing And Solutions Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":47075295461616,"sku":"2940046520538","price":0.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/7593\/9824\/files\/2940046520538_p0.jpg?v=1763694375","url":"https:\/\/shop-qa.barnesandnoble.com\/products\/2940046520538","provider":"Barnes \u0026 Noble (DEV)","version":"1.0","type":"link"}