{"product_id":"2940046522938","title":"Tamil Proverbs explained","description":"\u003cp\u003eஅணிந்துரை\u003c\/p\u003e\u003cp\u003eவாழ்வில் மனிதர்களை நெறிதவறாமல் நெறிப்படுத்திக் கொண்டே இருப்பது ஒரு தொடர் நிகழ்வு. அதையும் மீறி தவறுபவர்களுக்கு விசாரணையும் தண்டனையும் இருக்கிறதென்றாலும் தமிழர்கள் தொன்றுதொட்டு தவறுகளை செய்ய விடாமல் நெறிப்படுத்துதலுக்கு முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார்கள். ஏராளமான காப்பியங்கள் இலக்கியங்கள் நீதி நூல்கள் புராணங்கள் மூலம் இதை செய்தும் வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் படித்தவர்கள் மத்தியிலேயே தேங்கிவிடக் கூடாது என்று தான் பாமர மக்களும் நீதி நெறிகளைக் கடைப்பிடிக்க ஏதுவாக எளிமையான பழமொழிகளாக வாய்வழியாகவே வழங்கிவந்தார்கள். இவற்றின் சிறப்பே ஓசை நயமும் நையாண்டித் தனமும் உவமைகளை கையாளும் விதமும் தான். பெரும்பாலும் அறிவுரைகள் கேட்பவர்களை எரிச்சலடைய செய்யக் கூடியது. ஆனால் பழமொழிகள் கேட்பவர்களையும் கூட இரசிக்கச் செய்பவை.\u003c\/p\u003e\u003cp\u003eவாய்மொழியாக உருவாகி ஆங்காங்கே புத்தக வடிவில் கிடைத்து வரும் பழமொழிகளை மின்புத்தகமாகக் கொண்டு வரும் திருமதி.அகதாவின் முயற்சி பாராட்டுக்குரியது. பழமொழிகளுக்கான விளக்கங்களை சுருக்கமாக சமகாலத்திற்கு பொருந்தும் விதமாக வழங்கியிருக்கிறார். இணையத்தில் தமிழரின் தனித்துவ அடையாளமான பழமொழிகளை ஆவணப்படுத்துவது மட்டுமன்றி மேலும் மேலும் பழமொழிகளை அறியும் ஆவலைத் தூண்டும் விதமாக இந்நூல் அமைந்திருப்பது சிறப்பு. பொருத்தமான படங்களை தேர்ந்தெடுத்து கோர்த்திருப்பது அழகு.\u003c\/p\u003e\u003cp\u003e“வல்லவன் ஆட்டின பம்பரம் மணலிலும் ஆடும்” என்பது போல் தமிழில் எழுதும் தனது வல்லமையை இணையத்திலும் நிரூபித்திருக்கும் திருமதி.அகதாவின் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.\u003c\/p\u003e\u003cp\u003e- க.ஆனந்த்\u003c\/p\u003e","brand":"Mukil E Publishing And Solutions Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":47148700532976,"sku":"2940046522938","price":0.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/7593\/9824\/files\/2940046522938_p0.jpg?v=1763694429","url":"https:\/\/shop-qa.barnesandnoble.com\/products\/2940046522938","provider":"Barnes \u0026 Noble (DEV)","version":"1.0","type":"link"}